மும்பையில் பிரம்மாண்ட வீடு வாங்கிய சூர்யா?.. – விளக்கம் கொடுத்து குழப்பத்தை தீர்த்த ரோலக்ஸ்..!
Author: Vignesh16 August 2023, 3:00 pm
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதனிடையே சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். இருவரும் இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். ஜோதிகா கூட மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார். அதன் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.
இதனால் சூர்யா மோசமாக விமர்சிக்கப்பட்டார். காரணம் அப்போ இந்தி தெரியாது போடா என வாய் கிழிய பேசி எதிர்ப்புகள் தெரிவித்துவிட்டு நிஜத்தில் தமிழ் தமிழ்நாடு வேண்டாம் போடா.. இப்போ இந்தி வேணும் வாடா என்று பச்சோந்தி போன்று மாறிவிட்டதை விமர்சித்தனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாகவும், அங்கு பெரிய வீட்டை வாங்கி உள்ளதாகவும், வெளியான தகவல் அனைத்தும் பொய்யானது என்றும், மாறாக சூர்யா குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் தற்காலமாக தங்கி உள்ளதாகவும், இவற்றைத் தவிர வீட்டிலோ குடும்பத்திலோ எந்தவிதமான பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார். சூர்யாவின் குணத்திற்கு அவர் இப்போது இருப்பதைவிட இன்னும் நன்றாக இருப்பார் என ரசிகர்கள் நேர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.