ஜோ நீ போ நான் பார்த்துக்குறேன்… சூர்யாவை துபாய் ஏர்போர்ட்டில் ரவுண்டு கட்டிய மீடியா – வைரலாகும் வீடியோ!
Author: Rajesh3 January 2024, 8:02 pm
புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.
இதனிடையே சூர்யா தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். தற்ப்போது சூர்யா ஜோதிகா இருவரும் மும்பை ஏர்போட்டில் நடந்து வரும்போது அவர்களை ரசிகர்களும், கேமராமேன்களுடன் படம்பிடிக்க முயற்சித்தனர். உடனே சூர்யா ஜோதிகாவை நீ அந்த பக்கமா போ நா பார்த்துக்கிறேன். என கூறிவிட்டு வேகவேகமாக நடந்துச்சென்று அவர்களிடம் இருந்து தப்பித்தார். இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.