காதல் கணவர் சூர்யா உடன் விவாகரத்து?.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன ஜோதிகா..!

Author: Vignesh
30 January 2024, 1:29 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

surya jyothika-updatenews360

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

jyothika net worth

இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை விவாகரத்து செய்யப்போவது திடீரென ஷாக்கிங் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. படங்களில் நடிப்பது தொடர்பாக சூர்யா ஜோதிகாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், இதனால் விவாகரத்து முடிவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் தனது பிள்ளைகளுடன் மும்பை புறப்பட்டு சென்று விட்டார் ஜோதிகா என தகவல்கள் சொல்லப்படுகிறது.

இது குறித்து, சமீபத்தில் ஜோதிகா பேசியுள்ளார். அதில், நான் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருவதால் தான் மும்பைக்கு வந்துவிட்டேன். மேலும், என் பிள்ளைகள் மும்பையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். மேலும், நன்றாக படித்து வருகிறார்கள். நான் மும்பையில் பிள்ளைகள் சென்னையில் இருந்தால் அவர்களுடைய படிப்புக்கு சரிப்பட்டு வராது என்பதற்காகத்தான் அவர்களையும் என்னுடன் அழைத்து சென்று விட்டேன். ஹிந்தி படங்களில் கமிட்மெண்ட்ஸ் முடிந்தவுடன் மீண்டும் சென்னைக்கு வந்து விடுவோம் என கூறியுள்ளார். இதன் மூலம் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 428

    0

    0