புருஷன்-னா இப்படி இருக்கணும்.. சூர்யாவின் செயலை பாராட்டித் தள்ளும் ரசிகைகள்..!

Author: Vignesh
15 July 2024, 5:49 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

jyothika-3

பல எதிர்ப்புகளை மீறி சூர்யாவுடன் 2006 இல் திருமணம் ஜோதிகாவுக்கு நடந்தது. இதற்கு பின்னர், சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார். அதன் பின் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. தமிழ் ,மலையாளம், இந்தி மொழிகளில் கமிட்டாகி ஜோதிகா நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஜோதிகா தன் மாமனார் சிவகுமார் வீட்டை விட்டு மும்பையில் குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப பல கோடி செலவில் மும்பையில் பங்களா வாங்கி அங்கேயே செட்டில் ஆகி இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் பிரம்மாண்டமாக நடந்த அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா ஜோதிகா அங்கு எடுத்த போட்டோ ஸ்டில்கள் தற்போது, வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், ஒரு புகைப்படத்தில் ஜோதிகாவின் சேலையை சூர்யா சரி செய்து கொண்டிருக்கும் ஸ்டில் வெளியானது. இதனை பார்த்த பல ரசிகைகள் புருஷனா இப்படி இருக்கணும் என்று தெரிவித்து வருகின்றனர்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்
  • Close menu