இருங்க பாய்… அமரன் பட சாதனையை தவிடு பொடியாக்கிய கங்குவா!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 10:42 am

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. படம் வெளியான தினமே மோசமான விமர்சனங்களை பெற்றது.

அமரன் சாதனையை முறியடித்த கங்குவா

படம் பார்த்த அனைவரும் வைத்த ஒரே மாதிரியான விமர்சனம் படம் இரைச்சலாக உள்ளது. இசை ஜாஸ்தியாக கேட்பதால் காதே வலிக்கிறது என கூறினர்.

இதை படக்குழுவுக்கு தெரியப்படுத்த, வால்யூம் 2 வரை குறைக்க சொல்லியுள்ளதாக படத் தயாரிப்பாளர் கூறினார். இதனிடையே சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியுள்ளது.

படம் வெளியான முதல் 2 நாட்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அடுத்த 2 நாள் படத்திற்கு கூட்டம் அலைமோதியுள்ளது.

Kanguva Vs Amaran

கங்குவா வெளியான 3 நாட்களில் ரூ.127.64 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், ஞாயிறு வசூலை சேர்த்தால் 200 கோடி ரூபாய் தாண்டும் என கூறப்படுகிறது.

அதே சமயம் அமரன் வெளியான 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், கங்குவா 4 நாட்களில் இந்த சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 152

    0

    0