இந்தியன் 2 வசூலை கூட தாண்டல…கங்குவா படத்தின் 2வது நாள் வசூல் நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2024, 10:59 am

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக்ப்பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் கங்குவா. படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நடிகர் கார்த்தி நடித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் கங்குவா செய்த வசூல்!

ஆரம்பம் முதலே படத்திற்கு படக்குழு கொடுத்து ஹைப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த 14ஆம் தேதி படம் வெளியானது முதலே நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன.

Suriya Kanguva

முக்கியமாக படத்தில் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிக சவுண்டு உள்ளதால் இரைச்சலாகவே உள்ளது என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது.

திரைக்கதை, இசை, CG, VFX எதுவும் சரியில்லை என நெகட்டிவ் கமெண்ட்ஸ் பறந்தன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கங்குவா எத்தனை வசூல் செய்தது என்ற விபரம் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: அலிபாபாவும் அழகியும்…. ஜோதா – அக்பர் கெட்டப்பில் கணவருடன் ரம்யா பாண்டியன் – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

முதல் நாள் தமிழகத்தில் ரூ.14 கோடி வசூல் செய்த கங்குவா, 2வது நாள் முடிவில் ரூ.6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

Kanguva Box Office Collection

இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தயாரிப்பாளர் மற்றும் சூர்யா கொடுத்த ஓவர் ஹைப் படத்திற்கு எதிர்மறையாக மாறியுள்ளது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!