விவேகம் படம் மாதிரி இருக்கு.. சொதப்பியதா கங்குவா? X Review!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2024, 11:43 am

இரண்டரை வருடத்திற்கு பின் சூர்யா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியானது கங்குவா திரைப்படம்.

Kanguva Records in Telugu States

திஷா பட்டானி, பாபி தியோல், கார்த்தி மற்றும் ஏராளமானோர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான கங்குவா படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

Kanguva Movie review

நிச்சயம் படம் ₹1000 கோடி வசூல் செய்யும் என தயாரிப்பாளர் கூறியிருந்த நிலையில் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

கங்குவா படத்தின் பாசிட்டிவ்

இந்த நிலையில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் X தளத்தில் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். அதில் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது.

குறிப்பாக சூர்யாவின் இருவேடங்களில் மாறுப்பட்ட நடிப்பு, CG, இசை, பின்னணி இசை என படத்திற்கு கூடுதல் பலமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

சூரியாவின் உழைப்பு படத்திற்கு பிளஸ் பாயிண்ட், கிராபிக்ஸ் காட்சிகள் நினைக்க முடியாத விதத்தில் உள்ளது, சூர்யா வெறியாட்டம் ஆடியிருக்காரு.. கண்டிப்பாக அவருக்கு வெல்டன் சொல்லியே ஆக வேண்டும் என கமெணட்ஸ்கள் குவிகிறது.

கங்குவா நெகட்டிவ்

மறுபுறம், வேதாளம் துவக்க சீன்களும், விவேகம் மாதிரி காட்சிகள் வந்ததும் உண்மைதான். கங்குவா ஆரம்பிச்சது கொஞ்சம் சொதப்பலா இருந்தாலும், சிவா அதுக்கப்பறம் தாண்டவம் அடியிருக்காரு.

Kanguva Suriya Movie fans Reaction

படத்துல கருணாஸ் நடிப்பு, ஏராளமான நடிகைகளும் இருக்காங்க. போஸ் வெங்கட் மற்றும் பாபி தியோல் காட்சிகள் அருமை.. இருவரும் நடிப்பில் மிரட்டியுள்ளனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 208

    0

    0