அச்சு அசல் ரோலக்ஸ் சூர்யாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்..! (வீடியோ)
Author: Vignesh19 May 2023, 2:30 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஒரு படமென்றால் அது விக்ரம் படம் தான். விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் இந்த படம் கொண்டாடப்பட்டது.
விக்ரம் படத்தில் வெளியான ஆக்ஷன் காட்சிகள் திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், மனதில் பதியும் அளவிற்கு இருந்தது. விக்ரம் படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது மிரட்டலான நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இறுதியில் சில நிமிடங்களே சூர்யா தோன்றினாலும் பலரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார் என்று சொல்லாம்.
முன்னதாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே மேக்கப் போட்டுகொண்டு அவ்வப்போது வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மேக்கப் மூலம் அச்சு அசல் அப்படியே ரோலக்ஸ் சூர்யாவை போலவே நபர் ஒருவர் மாறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
Just tried makeup transformation to @Suriya_offl from #Vikram @Dir_Lokesh #suriya #suriyafans pic.twitter.com/DZjlTP3h9X
— Sreejith Damodaran (@ZEXAXCYVMEhyVJ3) May 18, 2023