மெகா ஹிட் படத்தை தவறவிட்ட சூர்யா… இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது..!

Author: Vignesh
8 January 2024, 6:39 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே, சூர்யா திடீரென தனது பெற்றோர்களை தனியாக தவிக்கவிட்டு மனைவி, பிள்ளைகளோடு மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இந்த பிரச்சனை ஜோதிகாவால் தான் வந்தது என்றும், ஜோதிகா குடும்பத்தையே பிரித்து சுக்குநூறாக்கி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

surya -updatenews360

இந்த நிலையில், தற்போது சூர்யா பல படங்களை கைவசம் வைத்திருந்து நடித்த வருகிறார். இந்நிலையில், சூர்யா கேரியரில் மிஸ் செய்த ஒரு படம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அந்தாதுன். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உலக அளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

hindi film

இந்த படத்தில் முதன் முதலில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என ஸ்ரீராம் முடிவு செய்து சூர்யாவை அணுகிய போது இந்த கூட்டணி சில காரணங்களால் கைகூடவில்லை. ஆனால், ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குருநாவை வைத்து அந்தாதுன் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயற்றியுள்ளார். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீராம் கூறியுள்ளார். இந்த படத்தை மிஸ் செய்ததற்காக சூர்யா வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 372

    0

    0