மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – ஜோதிகா..?

Author: Rajesh
2 March 2022, 2:07 pm

சூர்யா – ஜோதிகா ஜோடி பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், 2டி நிறுவனத்தின் சார்பாக சூர்யா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி