சூப்பர்ஸ்டார் படத்திற்கே இந்த நிலைமையா?.. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வசூல்..!

Author: Vignesh
15 July 2024, 1:10 pm

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தமிழில் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடிட்டியில் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்த நிலையில், அந்த படத்தை பாலிவுட்டில் சுதா கொங்குரா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமாரை வைத்து சூர்யா தயாரித்து இருந்தார்.

akshay kumar

மேலும் படிக்க: முன்னாள் காதலுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்?.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சர்ஃபிரா என்னும் டைட்டிலில் வெளியான இந்தி படத்தில் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு மட்டும் இல்லை கொஞ்சம் கூட ஓடவில்லை. படுதோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக, இந்த படத்திற்கு சூர்யா எந்த ஒரு புரமோஷன் செலவும் செய்யாமல் அப்படியே இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டார்.

akshay kumar

மேலும் படிக்க: நயன்தாராவால் ஏமாற்றப்பட்டோம்.. மீனாவுக்கும் குஷ்பூவுக்கும் நடந்த ‘அந்த’ விஷயம்..!

அக்ஷய குமாருக்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த சோலியையும் இந்த படம் முடித்து விட்டது என்றே சொல்லலாம். இத்திரைப்படம், முதல் நாளில் இந்தியாவில் வெறும் 2.40 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இரண்டாவது நாளில் ரூ. 4 கோடியும் வசூல் செய்துள்ளதாம். கோலிவுட்டில் அறிமுக நடிகர்களின் படங்களே இதற்கு மேல் வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி