விஜயகாந்த் உடல்நிலை: நடிகர் சூர்யா உருக்கமான ட்விட்டர் பதிவு..!

Author: Vignesh
4 December 2023, 10:30 am

கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய உடல் சிகிச்சையை ஏற்றுக் கொள்கிறது என மியாட் மருத்துவமனை கூறியிருந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக சிலரும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “விஜயகாந்த் வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

surya-and-vijayakanth

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்” என சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 488

    0

    0