களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!

Author: Selvan
7 March 2025, 12:47 pm

‘வாடிவாசல்’ படத்திற்கான முக்கிய அப்டேட்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களாக இப்படம் துவங்குமா? அல்லது படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டாரா? போன்ற கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தன.

இதையும் படியுங்க: தினமும் ஒவ்வொருவருடன் உடலுறவு.. நீ தப்பானவள் என திட்டிய தந்தை : நடிகை சோனா கண்ணீர்!

இந்நிலையில்,இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்,இயக்குநர் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு,வாடிவாசல் படத்தின் இசை பணிகள் தொடங்கியுள்ளன என்று உறுதி செய்துள்ளார்.இதனால்,வாடிவாசல் திரைப்படம் குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் ஜோடியாக ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்தின் நடிகர் பட்டியல் உறுதியாகியுள்ளது.

தற்போது, சூர்யா ‘ரெட்ரோ’ படத்தின் பணிகளை முடித்து,ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை முடித்த பின் 2025 ஏப்ரல் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்படம் 2025 இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து வெளியீட்டுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன்,சூர்யா இணைந்து உருவாக்கும் வாடிவாசல்,ஜல்லிக்கட்டு பின்னணியில் நடக்கும் ஒரு பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளது.இதனால், சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

  • Ilayaraja கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
  • Leave a Reply