சூர்யா ஜோதிகா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “காக்க காக்க” ரூ. 3 கோடி பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் அன்றைய காலத்திலேயே ரூ.33 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. கௌதம் மேனன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிருந்தா மாஸ்டர் நடன கலைஞராக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் நிலையில் அந்த படத்தில் இடம்பெறும் ரொமான்டிக் பாடலான “ஒன்றா இரண்டா ஆசைகள் ” பாடலில் ஜோதிகா சூர்யா இருவரும் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பிரபல நடன கலைஞரான பிருந்தா மாஸ்டர் பேசியிருக்கிறார். அதாவது அந்த பாடல் காட்சியில் படமாக்கும் போது சூர்யா ரொம்பவே வெட்கப்பட்டார் .
ரொம்ப க்ளோசா கிட்ட வந்து நடிக்கணும் என்று சொன்னதும்…. ரொம்ப குளோசா வேண்டாம் அக்கா என்று சொல்லுவார். ஆனால், ஜோதிகா Hey come close என்று கேஷுவலாக கூறிவிட்டு சிறப்பாக நடிப்பார். உண்மையிலே சூர்யா ரொம்ப வெட்கப்படுவார். அந்த பாடலில் அவ்வளவு நெருக்கமாக ரொமான்டிக்கா நடித்தால் தான் பிறகு ஜோதிகா இறந்து போகும்போது அந்த ஃபீல் வரும் என நான் எடுத்துக் கூறினேன்.
அதன் பிறகு இருவரும் க்ளோஸாக சேர்ந்து நடித்தார்கள். அந்த பாடல் காட்சிகளில் ரொமான்ஸ் பண்ணும்போது அவர்கள் நிஜமாகவே காதலை வெளிப்படுத்துகிறார்களா என எட்டிப் பார்ப்போம். ஆனால் அது தெரியாத வகையில் இருவரும் பார்த்துக் கொள்வார்கள் என பிருந்தா மாஸ்டர் கூறியிருந்தார்.