ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 7:59 pm
நடிகர் சிவகார்த்திகேயன் அண்மை காலமாக சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து வருகிறார், சமீபத்தில் வெளியான அமரன் படம் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட்.
போதாக்குறைக்கு விஜய் தனது துப்பாக்கிய எஸ்கே விடம் ஒப்படைத்தது அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் என பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனுக்கு தற்போது மதராஸி, பராசக்தி என அடுத்தடுத்து படங்கள் கைவசம் உள்ளது.
இதையும் படியுங்க: பணத்துக்காக ப***து நடிக்கணுமா? ரச்சிதாவை விளாசும் பிரபலம்!
இந்த நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 40வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், சினிமா துறை உட்பட பலரும் வாழ்த்துக்களை குவித்தனர்.
இதனிடையே வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகயேன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பை விட இன்னும் அதிகமாக உழைப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் அசூர வளர்ச்சியடைந்த சிவகார்த்திகயேன், தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.