கோவையில் மங்களகரமாக தொடங்கிய சூர்யாவின் 45 பட பூஜை..படத்தின் தலைப்பு இது தானா..!

Author: Selvan
27 November 2024, 3:33 pm

கங்குவா படத்தின் தோல்வி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா,கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவா திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியானாலும், அது ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

Surya Trisha pairing

சூர்யா 44 மற்றும் புதிய படம் சூர்யா 45

இதைத் தொடர்ந்து, சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின்பு, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சூர்யா 45 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதையும் படியுங்க: தனுசுடன் மோத ரெடி..வில்லனாக மாறும் பிரபல ஹீரோ… “இட்லிக்கடை” படத்தின் அப்டேட்….

இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா, சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.மேலும், சூர்யா 45 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கு மேலும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன.

பூஜை நிகழ்ச்சி

இத்திரைப்படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் துவங்கியது. இதில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Surya new film poojai

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்த பூஜை நிகழ்ச்சி பிறகு, சில ரசிகர்கள் கிண்டலடித்து, “இந்த படத்திற்கு மாசாணி அம்மன் என்ற டைட்டில்தான் வைக்கப் போகிறாரா?” என்று புகழ்ந்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!