மும்பையில் பிரம்மாண்ட பிளாட் வாங்கிய சூர்யா – விலை கேட்டால் ஆடி போயிடுவீங்க!

Author: Shree
17 March 2023, 8:49 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி மனைவி குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டார். இந்நிலையில் மீண்டும் ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

இந்த பிளாட் 9,000 சதுர அடி வரை இருக்கிறதாம். இதில் கார்டன் மட்டும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஜோதிகா கொடுத்த மாஸ்டர் பிளான் தானாம். அவரது சொந்த ஊர் மும்பை என்பதால் தான் கணவரை அங்கேயே கூட்டிச்சென்றுவிட்டாராம்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!