அத கூட சுயமா பேச தெரியாதா? விஜய் பேசியதை அப்பட்டமா காப்பியடித்த சூர்யா – வீடியோ!

Author:
26 July 2024, 11:00 am

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டியும் அரசியலில் இறங்கியுள்ளார். மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தனது திரைப்பட விழாக்களை கூட அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறார் நடிகர் விஜய்.

அப்படித்தான் லியோ ஆடியோ லான்ச்சில் அவர் பேசிய மாஸான ஒரு கருத்தை அப்படியே காப்பி அடித்து சூர்யா பேசியிருக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்ஸ் சூர்யாவை பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை சூர்யாவின் அகரம் கட்டளையுடன் இணைத்து பல உதவிகளை தற்போது செய்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் 45 வது விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிவக்குமார் ,சூர்யா ,கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா..” நீங்கள் என்னவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுங்கள்… பெரிதாக கனவு காணுங்கள்… கண்டிப்பாக உங்கள் கனவு நனவாகும்…அதனால் உங்களுடைய எண்ணங்கள் நிஜமாக மாறும் என பேசியிருக்கிறார்.

இவர் பேசிய இதே வார்த்தையை நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்னர் ‘லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “பெருசா கனவு காணும் நண்பா…. அதையெல்லாம் ஒருத்தரும் ஒன்னும் சொல்ல முடியாது” என்ன பேச அந்த அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்திருக்கும். விஜய்யின் இந்த மாஸான பேச்சை சூர்யா அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து பேசியிருக்கிறார். அத கூட சுயமா பேச தெரியாதா? என நெட்டிசன் ட்ரோல் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?