கமல்ஹாசனின் மனைவியை காதலித்த பிரபல நடிகர் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!
Author: Selvan11 November 2024, 2:34 pm
நடிகர் கமல் ஹாசன்
தமிழ் திரையுலகில் நடிகர்,பாடகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
இவர் சரிகா தாகூர் மற்றும் வாணி கணபதியை கல்யாணம் முடித்து பின்பு இருவரையும் விவாகரத்து பெற்று நடிகை கௌதமியுடன் லிவ் இன் ரிலஷன்ஷிப் இருந்தார்.அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
தெலுங்கு நடிகர் பாலய்யாவின் கேள்வி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா தொகுத்து வழங்கும் “அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக்”ஷோவில் சீசன் 4 ல் நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டனர்.
அதில் தனக்கு பிடித்த உணவு,திரைப்படம் என பல வித தகவல்களை பகிர்ந்த சூர்யா. பாலய்யா கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் வெட்கப்பட்டார் .
நடிகர் கார்த்தியின் பதில்
உங்களுக்கு எந்த வயதில் யார் மீது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என்று கேட்பார்.சூர்யா பதில் சொல்ல தயங்கியதால் உடனே பாலய்யா சூர்யா தம்பி கார்த்திக்கு போன் செய்து பதிலை போட்டு வாங்குவார் .
கார்த்தியிடம் பாலய்யா அந்த கேள்வி கேட்கவே அதற்கு கார்த்தி சுக்குபுக்கு சுக்குபுக்கு ரயிலே என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. அதில் நடித்த நடிகை தான் சார் என்று சொன்னார்.
அதை புரிந்து கொண்ட பாலய்யா கௌதமியா என்று கேட்க சூர்யா உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சுக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் பிரபுதேவாவுடன் கெளதமி நடனமாடியிருப்பார்.
கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் சூர்யாவின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.