7 மெடல்களை தட்டி தூக்கிய சூர்யா மகள் – பெருமையா பார்த்து ரசித்த ஜோதிகா!

Author: Rajesh
4 February 2024, 12:19 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

jyothika surya

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகிய இருவரும் தங்கள் பள்ளியில் sports day முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்ட 7 மெடல்களையும், கோப்பைகளை தட்டி தூக்கியுள்ளனர். அந்நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிள்ளைகளின் வெற்றியை பெருமையுடன் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 451

    0

    0