சூர்யாக்கு நடிக்க தெரியல.. விக்ரமை வர சொல்லுங்க.. விமர்சனம் செய்த பிரபல இயக்குநரை வறுத்தெடுத்த பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 4:45 pm

வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூர்யா.

இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.

வசந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் அஜித். ஆனால், சில காரணங்களால் அஜித் படத்திலிருந்து வெளியேறினார்.

இதன்பின் சிவகுமாரின் மகன் சூர்யாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார் வசந்த்.

ஆனால், முதலில் இந்த படத்தில் தன்னுடைய மகனை நடிக்க வைக்க சிவகுமார் சம்மதிக்கவில்லை. பின் பல முயற்சிகளுக்கு பின் தான் இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஓகே சொல்லியுள்ளார் சிவகுமார்.

படத்தில் நடித்த முடித்தபின் சூர்யாவிற்கு சரியாக டப்பிங் பேச வரவில்லை. குரல் நன்றாக இருந்தும் இவர் வாய்ஸ் செட் ஆக வில்லை என இயக்குநர், டப்பிங் பேச நடிகர் விக்ரமை வரவழைத்துள்ளார் இயக்குனர் வசந்த்.

இதை கேள்விப்பட்ட சிவகுமார் கோபத்தில் இயக்குனர் வசந்த்தை திட்டித் தீர்த்துள்ளார். இதன்பின் சூர்யாவை வைத்தே டப்பிங் செய்து முடித்துள்ளார் இயக்குனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 687

    4

    2