வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
Author: Selvan22 December 2024, 8:02 pm
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,மஞ்சு வாரியர்,சூரி என பலருடைய நடிப்பில் வெளிவந்த விடுதலை 2 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட வெற்றிமாறன் அவர்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது ரசிகர் ஒருவர் வட சென்னை 2 எப்போது வரும் என கேட்க அதற்கு வெற்றிமாறன் இப்போது எந்த திட்டமும் இல்லை என கூறினார்.
சில வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் பல வருடங்கள் ஆகியும் படம் சம்மந்தமான எந்த ஒரு வேலைகளும் தொடங்கவில்லை.அதன்பின்பு சூர்யா கங்குவா படத்தில் நடித்து அப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் பெற்றது.
இதையும் படியுங்க: பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
தற்போது சூர்யா தன்னுடைய அடுத்தடுத்து படங்களான சூர்யா 44,சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வெற்றிமாறன் விடுதலை2 வெற்றியை தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்க போவதாக உறுதியாக கூறினார்.அப்படத்தில் சூர்யாவை பற்றி எந்த தகவலையும் கூறாமல்,படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று கூறினார்.இதனால் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.