தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சூர்யாவா? பரபரப்பை கிளப்பிய பகீர் தகவல்!
Author: Vignesh26 July 2023, 7:30 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் மிரட்டலாக உருவாகி மிகப்பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்க முடிகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சூர்யாவின் பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, சூர்யாவின் பிறந்தநாள் பேனர் வைக்க முயன்று இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் சூர்யா தான் என்று போஸ்டர் அடித்துள்ளனர். இதனை பார்த்த சூர்யா ரசிகர்களிடம் இதுபோன்ற செய்யாதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.