அந்த விஷயத்தில் சூர்யா தான் BEST…. ஜோதிகா பெருமிதம்!

Author: Rajesh
13 December 2023, 3:14 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

surya jyothika - updatenews360

பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் மிரட்டலாக உருவாகி மிகப்பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்க முடிகிறது.

அதே போல் ஜோதிகாவும் படு பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக மம்முட்டியுடன் ஜோதிகா மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ” காதல் தி கோர்” திரைப்படத்தில் நடித்திருந்தார். பாடம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.

surya jyothika-updatenews360

அப்போது, தனது 25 ஆண்டு சினிமாவில் இந்த ஒரு விஷயம் மட்டும் தனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை என அழுத்தமாக கூறினார். பெண்களின் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாத ரோல்களில் நடிப்பதை தான் மரியாதையை குறைவாக நினைப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் தன் கணவர் சூர்யாவின் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் கூறினார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களில் ஜெய்பீம் , சூரரை போற்று படங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஜோதிகா கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி