ஸ்ருதி ஹாசனுடன் டேட்டிங் சென்ற சூர்யா – கடுப்பாகி கழட்டிவிட்ட சித்தார்த்!
Author: Shree20 March 2023, 5:36 pm
தமிழ் சினிமாவில் வாரிசு குழந்தை என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவின் 7ம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசனும் நடிகர் சித்தார்த்தும் தெலுங்கில் 2011ம் ஆண்டு வெளியான ஓ மை ப்ரண்ட் என்ற படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் வெளியான 7ம் அறிவு படத்தில் நடித்த போது சூர்யாவும் ஸ்ருதி ஹாசன் நண்பர்கள் என்ற முறையில் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
ஆனால், இது யாரோ சித்தார்த்தின் காதுக்கு தவறாக சொல்லிவிட சித்தார்த் ஸ்ருதி ஹாசனிடம் சண்டை போட்டு அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஏற்கனவே சித்தார்த் சமந்தாவை பல வருடம் காதலித்து பிரிந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். தற்போது அதிதி ராவ் உடன் லிவிங் லைஃபில் வாழ்ந்து வருகிறார்.