நீங்க No சொன்னா, இப்படி தான் நடக்கும்.. பிளாக்மெயில் செய்த சூர்யா – ஜோதிகா.. சிவக்குமார் ஓபன் டாக்..!

Author: Vignesh
1 March 2023, 7:30 pm

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.

lip balm updatenews360

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

surya jyothika - updatenews360

இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா.

surya jyothika - updatenews360

தற்போது, தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகுமார், தனது மகன் சூர்யா திருமணம் குறித்த கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

jyothika_Updatenews360

அதாவது காதல் விஷயத்தை பற்றி சொல்லிவிட்டு நான்கு வருஷம் இருவரும் காத்திருந்ததாகவும், அதன் பிறகு, தன்னிடம் வந்து நீங்க திருமணம் செஞ்சு வைக்கலைனா இப்படியே இருந்து விடுவோம் என இருவரும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

surya jyothika - updatenews360

தன்னை பொருத்தவரை, குழந்தையை பெற்று படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், அவர்களின் வாழ்க்கை பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.

குடும்ப கஷ்டத்தை எல்லாம் முடித்துவிட்டு, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு முழு சுதந்திரத்தை நாம் தான் வழங்க வேண்டும் என்றும், அப்படித்தான் நான் சூர்யா ஜோதிகா திருமணத்தை நடத்தி வைத்தேன் என நடிகர் சிவக்குமார் உருக்கமாக தெரிவித்தது தற்போது வைரலாகி வருகிறது.

  • Adult Comedy Movie Perusu First Day Collection பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!