புரட்டிப்போட்ட புயல்… முதல் ஆளாக மிகப்பெரும் தொகை கொடுத்து உதவிய சூர்யா – கார்த்தி!

Author: Rajesh
5 December 2023, 9:39 am

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் கோரதாண்டவத்தால் முதல் ஆளாக முன் வந்து நிவாரண தொகை வழங்கியுள்ளனர் நடிகர்கள் சூர்யா – கார்த்தி.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளனர். மேலும், ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு , அத்தியாவசிய பொருட்களை வழங்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். சூர்யா – கார்த்தியின் இந்த செயல் பல அரசியல்வாதிகளை கேள்வி எழுப்பியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 348

    0

    0