சண்டை வேண்டாம்; மும்பையில் சந்தித்து மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி; உற்சாகத்தில் ரசிகர்கள்,..

Author: Sudha
11 July 2024, 4:18 pm

சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சூரரைப்போற்று திரைப்படம் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைவதாக வந்த அறிவிப்பு ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ஆனால் இவர்கள் இணைவதாக சொன்ன புறநானூறு திரைப்படத்தை பற்றி இடையில் எந்த தகவலும் இல்லை.திடீரென புறநானூறு திரைப்படம் தள்ளிப்போவதாக இயக்குனர் சுதா கொங்காரா அறிவித்தார்.

புறநாநூறு கதையில் சூர்யாவிற்கு உடன்பாடு இல்லை எனவும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூர்யா இப்படத்தில் இருந்து விலகியதாகவும் பேசப்பட்டது. இதையடுத்து சுதா கொங்காரா சிவகார்த்திகேயனை வைத்து புறநானூரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் திரை வட்டாரம் சொன்னது.

இந்நிலையில் சண்டை மறந்து மீண்டும் சூர்யா சுதா கொங்கராவை மும்பையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒரு தேசிய விருது திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என்று பேசிக் கொள்கின்றனர் நெட்டிசன்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!