வாடிவாசலை எப்போ திறப்பீங்க…தயாரிப்பாளர் தாணு கொடுத்த புது அப்டேட்..!
Author: Selvan28 December 2024, 5:31 pm
சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி
இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இதற்கான போஸ்டர்களும் படக்குழு வெளியிட்டிருந்தது.ஆனால் அதன்பின்பு படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
இதற்கிடையில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்தார்,பின்பு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இயக்குனர் வெற்றிமாறனும் தற்போது விடுதலை2 படத்தை இயக்கி முடித்து அப்படம் தியேட்டரில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் வெற்றிமாறனிடம் வடசென்னை எப்போனு கேட்ட போது,அவர் அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்க போவதாக சொன்னார்.
இதையும் படியுங்க: நடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில்,வாடிவாசல் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார்.அதாவது வெற்றிமாறன் விடுதலை2-வில் பிஸியாக இருந்ததால்,இப்படத்தை ஷூட் பண்ண தாமதம் ஆனது.
ஆனால் இப்போ வாடிவாசல் அனிமேட்ரோனிக்ஸ் வேலைகள் லண்டனில் முடிய போகிறது.இனி அடுத்த வருடத்தில் விரைவில் படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கும் என தெரிவித்தார்.இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.