கங்குவா படம் பிரமாண்ட இயக்குநர் படத்தின் காப்பியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2024, 5:16 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. வரும் நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் இந்த படம் வெளியாக உள்ளது. தற்போது படத்தில் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது.
மும்பையில் படக்குழு முகாமிட்டு ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாகி உள்ளனர். பாபி தியோல், தீஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, கோவை சரளா, நடராஜன் சுப்பிரமணயிம் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்க: மூட்டை தூக்குனேன்… செத்தே போயிட்டேன் : சீரியலை விட்டு விலகிய மெட்டி ஒலி செல்வம்!
இந்த நிலையில் கங்குவா ஹாலிவுட் படமான GAME OF THRONES போல என இயக்குநர் சிறுத்தை சிவா கூறியிருந்தார். அஜித்திடம் இந்த கதையை கூறிய போது அவர் கதையை கேட்டு பாராட்டியதாகவும் கூறினார்.
அதே போல படம் குறித்து சூர்யா பேசிய போது, எனது முந்தைய படங்களில் ஒரு படத்தை போலத்தான் கங்குவா இருக்கும், படம் அருமையாக உள்ளது எனவும் கூறினார்.
இதனால் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். ஒரு வேளை ஏழாம் அறிவு மாதிரி இருக்குமோ, மன்னர் காலத்து கதை மற்றும் தற்போதை காலம் என ஏழாம் அறிவு படம் அமைந்திருந்தது போல இந்தப் படமும் இருக்குமோ என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது.
அதே போல ராம் சரண் நடிப்பில் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தின் கதையும் இதே மாதிரிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை இந்த படத்தோட காப்பியாக இருக்குமோ என்று சந்தேககிக்கப்படுகிறது.