நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதையும் படியுங்க: சேப்பாக்கத்தை அலறவிடும் அனிருத்…அனல் பறக்குமா இன்றைய ஆட்டம்.!
இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில்,இது தற்கொலை என கூறப்பட்டாலும்,அவரது தந்தை கே.கே.சிங் தன்னுடைய மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினார்.
இதனைத் தொடர்ந்து,மும்பை போலீஸ்,அமலாக்கத்துறை,மத்திய விசாரணை அமைப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகள் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டன.
இதற்கிடையே,சுஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இருந்த ரூப்குமார் ஷா “அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன,இது தற்கொலை அல்ல,கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.இந்த தகவல் வெளியாகியதும் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் சுமார் நான்கரை ஆண்டுகால விசாரணைக்கு பிறகு, சி.பி.ஐ. இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.அந்த அறிக்கையில் “சுஷாந்த் தற்கொலை செய்ததே உண்மை,கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என உறுதியாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் பரவி வந்த அனைத்து தகவல்களும் உண்மை அல்ல,மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் சி.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.இதனால்,இவ்வழக்கு தற்கொலை என முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
மாரடைப்பால் துடித்த தமீம் இக்பால்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தமீம் இக்பால் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்…
அணியின் பேலன்ஸா? சுயநல முடிவா? ஐபிஎல் 2025 தொடர் மிகவும் பரபரப்பாக தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
This website uses cookies.