கடைசி நேரத்தில் இவ்வளவு கொடுமை அனுபவித்தாரா சரத் பாபு? பதற வைக்கும் தகவல்!

Author: Shree
24 May 2023, 7:13 am

ஆந்திராவில் பிறந்தவரான நடிகர் சரத்பாபு, கடந்த 1971-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சரத்பாபு ஹீரோவாக பல படங்களில் நடித்தாலும் சரியாக ஹிட் கொடுக்கவில்லை என்பதால், இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார்.

இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ள இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக முத்து, அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது அதில் அவரது கேரக்டர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சரத் பாபுவின் கெரியரில் முத்து திரைப்படம் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. அப்படத்தில் ரஜினிகாந்தின் எஜமானாக நடித்து அசத்தி இருப்பார்.

இதனிடையே 71 வயதாகும் சரத்பாபு வயது முதிர்ச்சி காரணமாக சினிமாவில் நடிப்பதை விட்டு ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்நிலையில் நடிகர் சரத் பாபு மல்டிபிள் மைலோமா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்ததாக செய்திகள் கூறுகிறது. இதனால் அவருக்கு காலில் வீக்கம் மற்றும் உடல் எடை குறைவது என தொடர்ந்து நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தாராம் இந்த தகவலை பிரபல நடிகை சுஹாசினி மணிரத்தினம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 401

    0

    0