நடிகை சுஷ்மிதா சென்னுக்கு திடீர் மாரடைப்பு : அதிர்ச்சியில் திரையுலகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 5:52 pm

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றவர் சுஷ்மிதா சென். முதல்முதலில் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானார், ரட்சகன் படம் மூலம் சினிமாவில் நுழைந்த சுஷ்மிதா பின்னர் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சுஷ்மிதா சென் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், சில நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவரே பதிவிட்டுள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருப்பதாவது:- உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் , பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும். இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஸ்டென்ட் போடப்பட்டது. மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது என்பதை எனது இருதயநோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நிறையபேருக்கு தங்களின் சரியான நேரத்தில் உதவி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இந்த பதிவு உங்களுக்கு (எனது நலம் விரும்புபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு) தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. நல்ல செய்தி என்னவென்றால்… எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் எனது வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். நான் உங்களை அன்பு செலுத்துகிறேன் நண்பர்களே!!!! என கூறி உள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ