2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2025, 10:44 am
நடிகை சுவலட்சுமிக்கு திருமணமான பிரபல நடிகர் காதல் வலை வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறிய இடத்தை வைத்திருப்பர் சுவலட்சுமி. கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர்.
இதையும் படியுங்க : இந்தப் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? காலத்தால் அழியாத பாடகர் ஜெயச்சந்திரனின் சுவடுகள்!
இவரை பற்றி சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், சினிமாவுக்காக தன்னுடைய உண்மையான சுவலட்சுமி என்ற பெயரை மாற்றிக்கொள்ள முடியாது என மல்லுக்கட்டியவர் என கூறிய பயில்வான், சுவலட்சுமிக்கு நிறைய நடிகர்கள் காதல் வலை வீசியதாகவும் கூறினார்.
மேலும் நடிகர் கார்த்திக் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்த போது சுவலட்சுமிக்கு காதல் வலை வீசியுள்ளார். ஆனால் அவர் அது குறித்து எதுவுமே பதில் அளிக்கவில்லை.
கார்த்திக் அக்கா, தங்கை என இருவரை திருமணம் செய்தும், 3வதாக சுவலட்சுமிக்கு காதல் வலை வீசியுள்ளார். மூத்த நடிகர் என்பதால் சுவலட்சுமி இதையெல்லாம் மனதில் போட்டு குழப்பினால் சினிமா கேரியர் பாதிக்கப்படும் என கருதி வெளியில் எதுவும் சொல்லவில்லை.
மேலும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பவர். எனக்கு தெரிந்து நதியாவுக்கு பின் சுவலட்சுமிதான் சினிமாவில் நல்ல ஒழுக்கமான நடிகை என கூறியுள்ளார்.