என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…

Author: Prasad
7 April 2025, 11:23 am

நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்…

சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “டெஸ்ட்”. இத்திரைப்படம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவான கதையம்சம் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாகும். 

இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தாலோ என்னவோ இத்திரைப்படத்தை குறித்த புரொமோஷன் போதுமான அளவு இல்லை. ஆதலால் சிலருக்கு இப்படி ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. 

இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோருடன் மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து பழம்பெரும் நடிகரான எஸ்.வி.சேகர் மிகவும் காட்டமான பதிவு ஒன்றை தனது “X” தளத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா?

“என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு நானாக விலகினாலோ விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீஸாகி தியேட்டருக்கு வராது. இது வரலாறு, வரலாறு தொடர்கிறது” என்று தனது “X” தளத்தில் “டெஸ்ட்” திரைப்பட போஸ்டருடன் இப்பதிவை எஸ்.வி.சேகர் பகிர்ந்துள்ளார். 

எஸ்.வி.சேகர் இத்திரைப்படத்தில் முதலில் ஒப்பந்தமாகி அதன் பின் சில காரணங்களால் இத்திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளார் அல்லது விலக்கப்பட்டுள்ளார் என இதில் இருந்து தெரிய வருகிறது. எனினும் இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து படக்குழு இதனை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தார்கள் எனவும் சிலர் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்
  • Leave a Reply