கேட்டு அடிவாங்கிய ராக்கி;4 நாள் ஐ சி யு; மிரள வைக்கும் தன்னம்பிக்கை கதை,..

Author: Sudha
6 July 2024, 1:39 pm

ராக்கி என அன்புடன் அழைக்கப்படுவர் சில்வெஸ்டர் ஸ்டலோன். இரண்டு குறிப்பிடத்தகுந்த காதாப்பாத்திரங்களை இவர் செய்துள்ளார். குத்துசண்டை வீரர் ராக்கி பல்பா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஜான் ராம்போ. தி ராக்கி மற்றும் ராம்போ திரைப்படங்கள் அவரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டியது.


1946 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மன்ஹாட்டனில் ஸ்டாலோன் பிறந்தார்.பிரசவத்தின் போது மருத்துவர் அவரை வெளியே எடுக்க ஒரு ஜோடி ஃபோர்செப்ஸைப் பயன்படுத்தினார்.இதனால் அவரது முகத்தில் ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டு உதடு, கன்னம் மற்றும் அவரது நாக்கின் ஒரு பகுதி செயலிழந்து போனது.

பல தடைகளை கடந்து தன் வெற்றியை அடைந்தார் ஸ்டல்லோன்.1986 இல் அவருடைய கார்ட்டூன் வெளி வந்தது.ஆனால் தனக்கு அது பிடிக்கவில்லை எனவும் “என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை,” எனவும் “நான் அதை நிறுத்த முயற்சித்தேன், ஆனால் எனக்கு உரிமம் உரிமை இல்லை.”எனவும் தெரிவித்திருந்தார்.

ராக்கி IV இன் குத்துச்சண்டை கட்சியின் போது அந்த காட்சி தத்ரூபமாக அமைவதற்காக தன்னை உண்மையிலேயே குத்தச் சொன்னார். இடது மார்பில் குத்தப்பட்டு அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக 4 நாட்கள் ஐசியு வில் ஆபத்தான நிலைமையில் இருந்தார் ஸ்டல்லோன்.

தன் வேலைக்காக மெனக் கெடும் இதைப் போன்ற கலைஞர்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்கள்.

இன்று அவருடைய பிறந்த தினம்

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…