ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன டி.ஆர்… எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 6:16 pm

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் 80களில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நளினி, அமலா, ஜோதி, ஜீவிதா போன்ற பல நடிகைளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

பிரபல நடிகர் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர், தனது மகன் திருமணம் செய்து கொள்ளாதது நினைத்து கவலை படுவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என பல வதந்திகள் வருகிறது. ஆனால் தற்போது வரை அவருக்கு பெண் தேடும் வேலையில் தான் டிஆர் குடும்பம் பிஸியாக இருக்கிறது.

இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமடைந்தார்.

தற்போது பொங்கல் முன்னிட்டு டி ராஜேந்தர் பாட்டு பாடி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 772

    3

    4