சிம்பு அப்படி செஞ்சதுல என்ன தப்பு..? பெரிசுப்படுத்தாதீங்க.. : சப்போர்ட்டுக்கு வரும் TR..!
Author: Vignesh1 February 2023, 3:00 pm
நடிகரும், மகனுமான சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் டி.ராஜேந்தர் வெளிப்படையாகவே பதில் அளித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான டி.ஆர்.ராஜேந்தர் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற தனியிசைப் பாடலை தனது டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் மூலமாக தமிழ் மற்றும் இந்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டார். இதில் அவரது பேரன் ஜேசனை பாடகராகவும், நடிகராகவும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி ராஜேந்திரன் கொடுத்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறதுசிம்பு பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் இயக்குனர், நடிகருமான டி ராஜேந்திரன் மகன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார் சிம்பு. ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின்னர் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. சமீப காலமாகவே சிம்பு தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
மாநாடு படம்: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மாநாடு படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் ஹிட் அடித்தது. திருமணத்தை முடித்த Ex காதலிகள் : நயன்தாரா அவரை தொடர்ந்து ஹன்சிகா ஆகியோரை சிம்பு காதலித்தார். ஆனால், இந்த இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தது. நயன்தாராவிற்கு சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹன்சிகாவின் திருமணமும் முடிந்தது. ஆனால், சிம்பு மட்டும் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறார்.
இந்த நிலையில் சிம்புவின் காதல் குறித்து பல செய்திகள் வெளிவந்த காலகட்டத்தில் ஒரு பேட்டியில் அவரது தந்தையான டி.ராஜேந்தர் ஒரு சுவாரஸ்யமான பதிலை தெரிவித்துள்ளார்.
“தன்னுடைய மகனை பொறுத்தவரை சிம்பு திருமண வயதில் தான் அதனால், அவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சிம்பு நினைப்பது ஒன்றும் தவறு இல்லை எனவும், அவர் திரைத் துறையைச் சேர்ந்தவராக இருப்பதினால் திரைத்துறையைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என சிம்பு நினைப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இதில் என்ன தவறு உள்ளது. அவருடைய போக்கு எனக்கு நியாயமாக தெரிவதினால் சிம்புவின் காதல் குறித்து தான் விமர்சித்ததே இல்லை அது அவருடைய விருப்பம், நீங்களும் பெரிசுப்படுத்தாதீங்க” என டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.