அடுக்கு மொழி வசனத்தால் ARR”யை புகழ்ந்து தள்ளிய TR – விழுந்து விழுந்து சிரித்த சிம்பு!

Author: Shree
20 March 2023, 3:57 pm

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா தற்போது சிம்புவை வைத்து பத்து தல படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கவுதம் கார்த்தி, சிலம்பரசன், கெளதம் வாசுதேவ் மேனன் , பிரியா பவானி ஷங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஆடியோ லன்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய டீ ராஜேந்திரன், ” மைக் டெஸ்டில் ஒரு மியூசிக் போட்டு அனைவரையும் கவர்ந்தார்.

அதன் பின்னர்,

நான் இங்கு வரவேண்டும் என்று என் மகனுக்கு நாட்டம்,
நான் வர மறுத்தால் என் மகனுக்கு வந்துவிடுமோ வாட்டம்,
லேசாக பார்க்க நினைத்தேன் நீரோட்டம்,
நான் வரவேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் போராட்டம்,
என்னை பார்த்ததும் அவர்களுக்கு ஆனந்த நீரோட்டம்
அதற்கு காரணம் பத்து தல படத்தின் தேரோட்டம்,
என் மகனும் தமிழிலே பேசட்டும் என்னாட்டம்,
பாடட்டும் என்னாட்டம், பல்லாண்டு வாழட்டும் இறைவன் அருளூட்டம் என பேசி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

பின்னர் ஏஆர் ரஹ்மான் குறித்து,

ஆஸ்கர் பரிசு வீணையை பார்த்தேன் வெள்ளி,
என இதயத்தை தரநினைத்தேன் அள்ளி,
அழைத்தவுடன் வந்தேன் துள்ளி,
நீ இசைத்தல் சொட்டுகிறது தேன்
உனக்கு என் கையால் தந்தேன் அந்த வீணை என புகைந்து தள்ளிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 590

    4

    0