செக்ஸி உடலுக்காக லட்சத்தில் செலவு செய்யும் டாப்ஸி – அப்போ தான் கூப்பிடுவாங்கலாம்!
Author: Shree17 March 2023, 5:24 pm
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது செக்ஸி உடலை மெயின்டெய்ன் செய்ய டயட்டீஷியனுக்கு மட்டும் மாதம் 1 லட்சம் ருபாய் செலவு செய்கிறாராம்.
இது மட்டும் என் அப்பாவுக்கு தெரிஞ்சால் செம திட்டு திட்டுவார். எதுக்கு வீண் செலவு பண்ற? என கேட்பார். ஆனால், இது எனக்கு அத்தியாவசியமான ஒன்று. அப்படி நான் செலவு செய்து என் உடம்பை அழகை வைத்திருந்தால் மட்டுமே நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் என ஓப்பனாக கூறியுள்ளார்.