கர்ப்பமான பிறகு தான் திருமணம் அதுவரை… சர்ச்சை கிளப்பிய நடிகை டாப்ஸி!
Author: Shree18 July 2023, 4:11 pm
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது செக்ஸி உடலை மெயின்டெய்ன் செய்ய டயட்டீஷியனுக்கு மட்டும் மாதம் 1 லட்சம் ரூபாய் செலவு செய்கிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டாப்ஸி, ‘நான் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை. அதனால் திருமணம் இப்போதைக்கு இல்லை. நடக்கும்போது சொல்கிறேன் என்றார். இப்போது நடிகைகளுக்கு திருமணத்திற்கு முன்னர் கர்பமாதெல்லாம் ஒரு பேஷன் ஆகிவிட்டது என நெட்டிசன்ஸ் கூறி விமர்சித்து வருகிறார்கள்.