‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ல அந்த சீன குடும்பத்தோட பார்க்க சிரமப்பட்டேன்… தமன்னா Open Talk..!

Author: Rajesh
2 July 2023, 11:00 am

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

Tamannaah -updatenews360

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

Tamannaah -updatenews360

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகியுள்ள ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ஆங்கில புத்தாண்டு பார்ட்டியில் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ளார். இதில், நிறைய படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டியில், லஸ்ட் ஸ்டேரிஸ் 2ல் நான் நடித்த காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளேன். ஆனால், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் சில காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்க்க மிகவும் சிரமப்பட்டேன், படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால், ஒரு நடிகையாக மகிழ்ச்சி அடைந்தேன். செக்ஸ் பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரியவேண்டும். லஸ்ட் ஸ்டோரிஸ்-2 படத்தை ரசிகர்கள் எந்த தயக்கமுமின்றி பார்க்க வேண்டும் என்று தமன்னா கூறியுள்ளார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!