யாரு சொன்னது? அது வைரமே இல்லங்க… தாறுமாறா பரவிய வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி!

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்

தமன்னாவின் இந்த திடீர் கவர்ச்சியும், பலான படங்களில் நடிப்பது குறித்தும் பேசிய பிரபல சினிமா விமர்சகர் வித்தகன், ” தமன்னா நடிக்க வந்த புதிதில் கவர்ச்சிக்கு அளவு வைத்து நடித்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்ட சொன்னாலும் அதெல்லாம் முடியாது வேற ஹீரோயின் வச்சி எடுத்துக்கோங்க என சீன் போடுவராம். ஆனால், தற்போது புது நடிகைகளின் வரவால் வைப்பில்லாமல் போனதும் 33 வயசு ஆகிவிட்டதால் இன்னும் ஒரு சில வருடங்களே ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தாறுமாறான கவர்ச்சி காட்டி நடித்து பணத்தை சம்பாதிக்கிறார்.

இதனால் தமன்னாவின் மார்க்கெட் தற்போது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக செய்தி ஒன்று வைரலாக பேசப்பட்டு வருகிறது. தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரணின் மனைவி உபாசனா தான் தயாரித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிரஞ்சீவியின் மருமகள் உபாசனா விலையுயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவுக்கு பரிசாக கொடுத்தார். அதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் இந்த மோதிரம் உலகிலேயே 5-வது பெரிய வைரம் என்றும் சொல்லப்பட்டது. இதனால் இந்த செய்தி சமூகவலைத்தளங்கள் முழுக்க பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, உலகின் 5வது பெரிய வைரமா? யாரு சொன்னது? இது வைரமே இல்லை. வைர டிசைன் கொண்ட பாட்டில் ஓப்பனர் தான் இது.. ஜஸ்ட் போட்டோ ஷூட் நடத்தி போஸ் கொடுத்தேன் அவ்வளோவ் தான் என விளக்கம் கொடுத்துள்ளார். அதுக்குள்ள நம்ம பயலுங்க வித விதமா ரீல் சுத்திட்டாங்களேப்பா என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

Ramya Shree

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

14 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

15 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

17 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

17 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

18 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

19 hours ago

This website uses cookies.