உண்மையிலே காதலிக்கிறீங்களா? திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா!

Author: Shree
14 March 2023, 9:49 pm

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

தொடர்ந்து அஜித், விஜய், தனுஷ், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மா உடன் பார்ட்டியில் லிப்லாக் செய்த வீடியோ இந்த இணையத்தில் வைரல் ஆனது.

இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள தமன்னா, “நாங்கள் ஒன்றாக ஒரு படத்தில் நடித்தோம். மோசமான சில வதந்திகள் பரவியது.

அது எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பது தேவையில்லாதது. அதை பற்றி வேறு எதுவம் சொல்ல விரும்பவில்லை” என தமன்னா கூறி எஸ்கேப் ஆனார். அவர் பட்டும் படாததை சொன்னதை பார்த்தால் உண்மையிலே அப்படித்தான் போல.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!