அந்த ஆட்டத்துக்கு இவ்வளவு கம்மி சம்பளமா? தமன்னாவுக்கு கூட்டி கொடுக்க சொல்லும் ஜெயிலர் Fans!
Author: Shree10 August 2023, 11:57 am
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளியுமாகி ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது.
எதிர்பார்த்த லாபத்தை தாண்டி வசூல் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு நடிகை தமன்னா வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கினாராம் தமன்னா. இது ரொம்ப கம்மி இன்னும் கூட்டி கொடுக்க வேண்டும் என ஜெயிலர் படம் பார்க்க வந்த ஆடியன்ஸ் கூறியுள்ளனர். காரணம், லிஸ்ட் ஸ்டோரி , ஜீ கர்தா என வெப்தொடர்களில் நடித்து மார்க்கெட் பிடித்து இந்திய சினிமா ரேஞ்சில் டாப் இடத்தில் இருக்கும் தமன்னாவிற்கு ரூ. 3 கோடி என்பது ரொம்ப கம்மி என்பது தான் நிதர்சனமான உண்மை என்கிறார்கள்.