அந்த விஷயத்தை அப்படி பண்ணனும்னு நெனச்சேன் ஆனால்.. -வெளிப்படையாக பேசிய தமன்னா..!
Author: Vignesh16 June 2023, 12:30 pm
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். என்னதான் மேக்கப்பில் தனியாக ஜொலித்தாலும், மேக்கப் இல்லாமலும் நடிகை தமன்னா அழகாகதான் இருப்பார்.
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஜீ கர்தா என்ற வெப் தொடர் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் டிரெய்லர் வெளியான போது அதில் ஆபாச வசனங்கள் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, “தான் சினிமாவிற்கு வந்த புதிதில் 10 படங்களில் நடித்து விட்டு 30 வயதில் திருமணம் செய்து கொள்ள நினைத்ததாகவும், ஆனால் தற்போது தனக்கு 30 வயது மேல் கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
லவ் ஸ்டோரி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்த தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ரகசிய காதலில் இருப்பதாக இருவரும் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வைரலானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.