லிப் கிஸ்ஸை தொடர்ந்து நைட் டேட்டிங்…இல்ல இல்லனு சொல்லிட்டு இஷ்டத்துக்கும் திரியும் தமன்னா!
Author: Shree25 April 2023, 11:52 am
மும்பையை சேர்ந்த நடிகை தமன்னா நல்ல அழகு தோற்றம் என சினிமாவில் அறிமுகமான உடனே அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது.
தொடர்ந்து அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகர் விஜய் வர்மா உடன் பார்ட்டியில் லிப்லாக் செய்த வீடியோ இந்த இணையத்தில் வைரல் ஆனது, இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்திகள் வெளியானது. அதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு,
தமன்னா, “விஜய் வர்மாவுடன் நான் தொடர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறேன் நாங்கள் படத்தில் ஒன்றாக நடித்தோம் அவ்ளோதான். அவர் மீது எனக்கு காதல் இல்லை என கூறி முடித்தார். ஆனால், அவர் அப்பட்டமாக பொய் சொல்லிவிட்டு விஜய் வர்மாவுடன் டேட்டிங், டின்னர் அவுட் என ஜோடியாக சுற்றித்திரிந்து வருகிறார்.

ஆம் , மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் வர்மாவுடன் காரில் ஏறி செல்லும் இந்த வீடியோ அவர்கள் ரகசியமாக காதலித்து வருவதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. பொருத்தமில்லாத இந்த ஜோடியை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/Crbb4guAXt_/