2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகியுள்ள ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் வழக்கமாக வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை திடீரென உயர்த்தி மார்கெட் உச்சத்தை தொட்டுள்ளார். ஒரு படங்களுக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்ததற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினராம். காரணம் இதில் படுக்கையறை காட்சிகள் முத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றதால் தான் என செய்திகள் கூறுகிறது.