ரொம்ப கஷ்டம்… ரஜினி அப்படி இருப்பார்னு நான் எதிர்பார்க்கல – தமன்னா!

Author: Shree
16 October 2023, 5:10 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி பேசிய அவர், “நான் பார்த்ததிலே மிகவும் அமைதியான மனிதர் ரஜினி தான். பெரிய சூப்பர் ஸ்டார் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மிகவும் எளிமையாக இருக்கிறார். அவரிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரது குணம் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என தமன்னா கூறினார். முன்னதாக அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் தனக்கு பிடிக்கவில்லை என தமன்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!