விஜய் படத்துல நடிச்சு என் மானமே போச்சு… அந்தரங்க காட்சியில் நடித்த பிரபல நடிகை புலம்பல்!
Author: Shree31 July 2023, 11:32 am
2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்க நடித்ததிலே எது மோசமான படம். அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது என நினைத்த படம் எது? என்ற கேள்விக்கு பட்டென பதில் அளித்த தமன்னா, ” அப்படி நிறைய படம் இருக்கிறது. ஆனால் விஜய்யுடன் நடித்த ” சுறா ” திரைப்படம் தான் மோசம். அந்த படத்தில் விரும்பி தான் நடித்தேன். ஆனால், அந்த ரோலில் நான் நடித்தது எனக்கு பிடிக்கவில்லை. இனிமேல் அது போன்ற படங்களில் நடிக்கவே மாட்டேன் என தமன்னா கூறினார். இந்த பேட்டி பார்த்து விஜய் ரசிகர்கள் செம கடுப்பாகிவிட்டார்கள்.